Sunday, August 21, 2011

பிரபு தேவாவின் புதிய காதலி







ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டராக இருந்த பிரபு தேவா திடீரென நடிகர் ஆனார். நடனத்தில் காட்டிய கவனம் மாறி, நடிப்பில் மும்முரமாகிவிட்டார். நடிப்பு சான்ஸ் குறைந்தபோது, திடீரென டைரக்டர் ஆகிவிட்டார். இப்படி தன்னுடைய வேலைகள் மாறி வரும் நிலையில், இதே பார்முலாவை தன்னுடைய சொந்த விஷயத்திலும் பயன்படுத்தி வருகிறாரோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிரபு தேவா, திடீரென நயன்தாராவுடன் திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். இந்த சூடு அடங்குவதற்குள் பிரபுதேவா பற்றி இன்னொரு சூடான செய்தி வெளிவந்துள்ளது. அவர் இயக்கும் 'எங்கேயும் காதல்' படத்தில் நாயகியாக நடிக்கும் ஹீரோயின் ஹன்ஸிகா மோத்வானி மீது அவருக்கு புதிய காதல் பிறந்துள்ளதாக கிசு..கிசு வெளியாகியுள்ளன. மேலும் இந்த செய்தி நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளதாகவும். சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரபு தேவாவிடம் கடுமையாக நயன்தாரா சண்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியில் யாரை தான் பிரபுதேவா கல்யாணம் செய்வாரோ?








No comments:

Post a Comment

back to top Back to top