Tuesday, August 16, 2011

ஆக 30-ல் அஜீத்தின் மங்காத்தா! - வெங்கட் பிர











அஜீத்தின் பொன்விழா படமான மங்காத்தா வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி 
உலகெங்கும் வெளியாகிறது. இந்தத் தகவலை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

அஜீத், திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஆடியோ சிடி மங்காத்தாதான் என்று விற்பனையாளர்கள் பாராட்டும் அளவுக்கு பரபரப்பான விற்பனையில் உள்ளது இந்த சிடிக்கள்.

சமீபத்தில் மங்காத்தா பட வெளியீடு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், "மங்காத்தா படத்தில் அஜீத் கெட்டவனாக நடித்துள்ளார். இந்தக் கதையில் மொத்தம் 5 கேரக்டர்கள். அதில் 4 பேர் கெட்டவர்கள். 5-வது ஆள் ரொம்ப ரொம்ப கெட்டவர்.

எனது படங்களின் கதை கிரிக்கெட்டோடு தொடர்புடையதாகவே இருக்கும். சென்னை 28-ல் பசங்களோட ஏரியா கிரிக்கெட்டை சொன்னேன். "சரோஜா"வில் கிரிக்கெட் போட்டி பார்க்க போனவர்கள் கதையை சொன்னேன். "மங்காத்தா"வில் கிரிக்கெட் பின்னால் உள்ள சூதாட்டங்களைச் சொல்லி இருக்கிறேன்.

அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம். இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர்ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் வெள்ளை முடியோடு அஜீத் வருகிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் 30ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையான வேடத்தில் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இது அஜீத்தின் பொன்விழா படம். அஜீத்துக்குதான் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிந்தும் அர்ஜூன் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்," என்றார்.

மங்காத்தாவை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வெளியிடுகிறது.








No comments:

Post a Comment

back to top Back to top