Tuesday, August 16, 2011

நடிகர் விஜய் பார்க்கவேண்டிய பதிவு

‘வேலாயுதம்’ படத்தில் விஜய்யின் பிரம்மாண்டம், பேசப்படுவதாக இருக்கும் என்று இயக்குனர் ஜெயம் ராஜா கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: ‘வேலாயுதம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது கிராமம், நகரம் என மாறி மாறி வரும் கதையை கொண்டது. ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் மற்றும் 15 வில்லன்கள் நடிக்கிறார்கள். 


தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வழக்கமான விஜய்யின் படங்களில் என்ன இருக்குமோ, அதைவிட பத்து மடங்கு கமர்சியல் அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாகவே விஜய்யை பிரம்மாண்டம் என்பார்கள். 

இதில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்தப் படத்துக்காக விஜய் கொடுத்த ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து மிரண்டு போனேன். அவரால் 5 நிமிடம் கூட ஷூட்டிங் தாமதமானதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படப்பிடிப்பின்போது பல்வேறு பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டன. 

சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமலேயே சொந்த செலவில் ‘கேக்’ வாங்கி வந்து ஷாக் கொடுப்பார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை மறக்கவே முடியாது. விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே காமெடி காட்சிகள் அதிகம் உள்ள படமாகவும் இது இருக்கும். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு ஜெயம் ராஜா கூறினார்.

No comments:

Post a Comment

back to top Back to top