மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர் மகத்துக்கும், வெள்ளாவி பொண்ணு டாப்சிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தமிழில் இவர் நடித்து இந்த ஒருபடம் தான் வெளியாகியுள்ளது. ஆனால் அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில் இவருக்கும், மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்துள்ள நடிகர் மகத்துக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது. இவர் நடிகர் சிம்புவின் நண்பர் ஆவார்.

Back to top
No comments:
Post a Comment