Thursday, November 3, 2011

ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கும்?

அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தைகள் (ஒரு ஆண், ஒரு பெண்) பிறக்கலாம் என அமிதாப் பச்சனின் குடும்ப ஜோதிடர் ஒருவர் உறுதியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அன்று காலை(நவம்பர் 11) சரியாக காலை 11 மணி 11 நிமிடம் ஆகும் போது குழந்தைகள் பிறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை குழந்தைக்கு அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும், அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

back to top Back to top